’தனித்துவமானவன்’ ஆன அஜீத் - ஷாலினியின் குழந்தை

Bookmark and Share

’தனித்துவமானவன்’ ஆன  அஜீத் - ஷாலினியின் குழந்தை

தல அஜீத் குமாரின் மகனுக்கு ஆத்விக் என்று பெயர்சூட்டியுள்ளனர். இந்த பெயரை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது ரசிகர்கள் அதை ட்ரெண்ட் ஆக்க முயற்சி செய்து வருகின்றனர்.

நடிகர் அஜீத் - ஷாலினி தம்பதிக்கு கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று அதிகாலை ஆண்  குழந்தை பிறந்தது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக அந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் ‘குட்டி தல' என்றே கொண்டாடி வந்தனர்.

ட்விட்டர், ஃபேஸ்புக்கிலும் படங்களையும், தகவல்களையும் பறிமாறி வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜீத்குமார்.

2000ம் ஆண்டு ஏப்.24ம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2008ல் மகள் அனொஷ்கா பிறந்தாள்.இந்நிலையில் ஷாலினி - அஜீத் தம்பதியினருக்கு 6 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் குழந்தை பிறந்தது.

இம்முறை ஆண்குழந்தைக்கு தந்தையானார் அஜீத். குழந்தைக்கு ஆத்விக் அஜீத் குமார் என்று பெயர் சூட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆத்விக் என்றால் தனித்துவமானவன் என்று அர்த்தமாம்.

 


Post your comment





Related News
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?
பிரபல நடிகை கையை அறுத்த அஜித்- படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு ஆனால் நன்மைக்கே
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று திருமண நாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions