அஜித்-ஷாலினிக்கு இன்று 15வது திருமண நாள்!

Bookmark and Share

அஜித்-ஷாலினிக்கு இன்று 15வது திருமண நாள்!

நடிகர் அஜித் வாழ்க்கையில் இப்போது அத்தனையும் சந்தோஷம்தான். மகன் பிறப்பு, மகனுக்கு பெயர் சூட்டுதல் என்று அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளுக்கு நடுவே, இதோ, இன்று தனது 15வது திருமண நாளில் காலடி எடுத்து வைத்துள்ளார் இந்த காதல் மன்னன்.

"மனம் விரும்பும் காதலியே, மனைவியாக வரும்போது, வாழ்க்கை இன்ப வரமாகும்" என்ற 'இளைய தளபதி' நடிகரின் திரைப்படப் பாடல் வரிகள், இந்த 'தல' நடிகருக்கு மிக பொருந்தும்.

அமர்க்களம் படத்தில் ஷாலியுடன் பழகும்போது மலர்ந்த காதல், இன்றுவரை அமர்க்களமாகவே போய்க் கொண்டுள்ளது. சினிமா வட்டாரத்தில் ஆதர்ஷ தம்பதிகள் என்று பெயரெடுத்த ஒரு சிலருக்கான பட்டியலில், இந்த தம்பதிகளும் இடம் உண்டு.

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தமிழக மக்களால் பார்க்கப்படும், ஷாலினியை திருமணம் செய்ததன் மூலம், 'நான் தமிழ்நாட்டு மருமகன்' என்றார் அஜித். ஆனால், இன்று தமிழ் ரசிகர்களோ அவரை 'தல'மகனாக்கி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அத்தனை, அஜித் ரசிகர்களுக்கும் ஷாலினி இன்று, அன்னைக்கு சமமான அண்ணியாகிவிட்டார்.

அமர்க்களம் பட சூட்டிங்கில், ஷாலினி கையில் கத்தி பட்டு ரத்தம் வந்த நிலையில், பதறிப்போய், துடிதுடித்து, ஒரு மருத்துவ குழுவையே ஸ்பாட்டுக்கு வரவைத்தார் அஜித். அடுத்தவருக்கு ஒன்றென்றால், தனக்கு வந்த துன்பம் போல பதறும் நல்ல மனிதராக இருக்கிறாரே என்று நினைத்து இதயம் இளகியது ஷாலினிக்கு.. ஆனால் கத்தி காயத்தை பற்றி கொஞ்சம் கூட கவலையின்றி 'ஜஸ்ட் லைக் தட்' என்று எடுத்துக்கொண்ட ஷாலினியை பார்த்து, அஜித்துக்கு ஒரு ஆர்வம் பற்றிக் கொண்டது.

அதுதான் காதல் விதை விழுந்த இடம். ஒருவர் பதறுபவர், மற்றொருவர் பக்குவப்பட்டவர். இரு துருவங்களுக்குள் ஈர்ப்பு வருவது இயல்புதானே. ஒருவர் மிருதங்கமும், இன்னொருவர் வீணையும் வாசித்தால்தானே கச்சேரி களைகட்டும். அப்படித்தான், தற்போது அஜித் வாழ்வில் கச்சேரி களைகட்டிக் கொண்டுள்ளது.

இப்போதுதான் திருமணம் செய்ததை போல இருந்தது.... இன்றோடு 15வது ஆண்டு திருமண நாளில் ஆதர்ஷ அஜித் தம்பதி காலடி எடுத்து வைத்துள்ளது.

 


Post your comment





Related News
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?
பிரபல நடிகை கையை அறுத்த அஜித்- படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு ஆனால் நன்மைக்கே
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று திருமண நாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions