முழு ஈடுபாட்டுடன் வெள்ள நிவாரணப் பணியில் ஷாலினி அஜித்!

Bookmark and Share

முழு ஈடுபாட்டுடன் வெள்ள நிவாரணப் பணியில் ஷாலினி அஜித்!

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் சென்னையில் உட்பட பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த கன மழையால் தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

பல வீடுகள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தற்போது தவிக்கின்றனர். மேலும் பல வீடுகளை தண்ணீரில் அடித்து செல்லபட்டன. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்ள் மற்றும் நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஷாலினி அஜித் கடந்த 3-ம் தேதி அன்று தனது சமூக வலைத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 400 பேருக்கு தேவையான உணவு சமைத்து வருவதாகவும், உணவு தேவைப்படுபவர்கள் தாராளமாக இங்கு வந்து உணவு சாப்பிட்டோ அல்லது எடுத்து கொண்டோ போகலாம் என்று தகவலை பதிவு செய்தார்.

இந்த செய்தியை கண்ட பலர் மிக வேகமாக அங்கு வந்து சிலர் அங்கேயே சாப்பிட்டு, உணவு பொட்டளங்களையும் பெற்று கொண்டு சென்றனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions