அஜித் மச்சினிச்சியை ஜோடியாக்கிய தனுஷ்!

Bookmark and Share

அஜித் மச்சினிச்சியை ஜோடியாக்கிய தனுஷ்!

பிரபுசாலமன் இயக்கும் த்ரில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். சென்னையிலுள்ள பின்னி மில்லில் ரயில்வே செட் போடப்பட்டு அதற்குள்ளேயே படப்பிடிப்பு நடைபெற்று வரும் அப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து தனுஷ் காக்கிசட்டை துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படவேலைகள் அக்டோபரில் தொடங்கவுள்ளது.

மேலும், அவர் அண்ணன்-தம்பி என இரண்டு விதமான வேடங்களில் நடிக்கும் இப்படத்தை வெற்றிமாறனின் க்ராஸ் ரூட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஷாம்லியை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். இந்த படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர் என்பதால் அந்த இன்னொரு நடிகை லட்சுமிமேனனா? இல்லை வேறு நடிகையா? என்பதை அவர் தெரிவிக்கவில்லை.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions