அஜீத்துடன் நடிக்கவே மாட்டேன்: ஷாமிலி

Bookmark and Share

அஜீத்துடன் நடிக்கவே மாட்டேன்: ஷாமிலி

அஜீத் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி இப்போது தமிழ் பட உலகில் நாயகியாக நடிக்க இருக்கிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஷாமிலி.

விக்ரம் பிரபு நடிக்கும் 'வீரசிவாஜி' படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இது தவிர மலையாளம், தெலுங்கு படங்களில் நடிப்பது பற்றியும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

இது குறித்து ஷாமிலி கூறும்போது, “நான் சினிமாவில் நடிப்பதில் அக்காள் கணவர் அஜீத்துக்கு அவ்வாளவாக விருப்பம் இல்லை. என்றாலும், நான் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை சொன்ன உடனே அதற்கு முழு ஆதரவு கொடுத்தார்.

நான் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்பியதும், ஒரு புதிய மலையாள படத்திற்காக அவரே என்னை போட்டோ எடுத்தார். அதை மறக்க முடியாது. 

அவர் மிகவும் அமைதியானவர், குடும்பத்தை மிகவும் விரும்புவார். அவருடன் இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவார்கள். நடிப்பில் திறமையை காட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. 

நான் ஒரு போதும் அஜீத் ஜோடியாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி சிந்திப்பேன். மார்டனாக மட்டுமே நடிப்பேன், ஆனால் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions