அஜித்-ஷங்கர் படம் பூஜை போட்டு பாதியிலேயே நின்றது- என்ன படம் தெரியுமா?

Bookmark and Share

அஜித்-ஷங்கர் படம் பூஜை போட்டு பாதியிலேயே நின்றது- என்ன படம் தெரியுமா?

அஜித்-ஷங்கர் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும். இந்த கூட்டணி எப்போது அமையும் என்று தெரியவில்லை.

ஆனால், ஒவ்வொரு ரசிகனின் ஆசையும் இதுதான், எப்போது அஜித்-ஷங்கர் இணைந்து பணியாற்றவிருக்கின்றார்கள் என ஒரு செய்தி வரும்.

இறுதியாக அவை வழக்கம் போல் வந்ததியாகவே போய்விடும், உண்மையாகவே இந்த கூட்டணி ஒரு படத்தில் இணைந்தது.

அந்த படத்திற்கு பூஜையெல்லாம் போட்டு, படப்பிடிப்பு செல்லும் நேரத்தில் அந்த படம் ட்ராப் ஆனது.

ட்ராப் ஆன அந்த படம் வேறு ஒன்றுமில்லை, பிரசாந்த்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன ஜீன்ஸ் தான்.

இதில் முதன் முதலாக அஜித் தான் நடிக்கவிருந்தது, இந்த கூட்டணி அப்போது பிரிந்தாலும், எப்போதாவது இணையும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions