அஜித்துடன் நடிக்க ஆர்வத்துடன் இருக்கும் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

அஜித்துடன் நடிக்க ஆர்வத்துடன் இருக்கும் ஸ்ருதிஹாசன்!

தமிழில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் நடித்த ஸ்ருதிஹாசன், அதன்பிறகு 3 படத்தில் தனுசுடன் நடித்தார். அதற்கடுத்து விஷாலுடன் பூஜை படத்தில் நடித்த அவர், தற்போது விஜய்யுடன் புலியில் நடித்துள்ளார்.

முந்தைய படங்களைப் போன்றே இந்த புலி படத்திலும் ஸ்ருதிஹாசனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினி வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், அடுத்தபடியாக வீரம் சிவா இயக்கத்தில் அஜித்தின் 56வது படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இந்த படத்தில் நடிக்க நயன்தாரா, தமன்னா, சமந்தா உள்பட பல முன்னணி நடிகைகள் போட்டிக்கோதாவில் குதிக்க, எந்தவித முயற்சியும் செய்யாமல் ஸ்ருதிக்கு எளிதாக அஜித் படவாய்ப்பு கிடைத்தது.

மேலும், வீரம் படத்தில் அண்ணன் தம்பி பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த டைரக்டர் சிவா, இந்த படத்தில் அண்ணன்-தங்கச்சி பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

அதோடு தற்போது முதல்கட்டமாக அண்ணன்-தங்கை சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளையே படமாக்கி வருகிறார்.  அடுத்தகட்டமாகத்தான் அஜித்-ஸ்ருதிஹாசன் இணையும் காட்சிகளை படமாக்கப்போகிறாராம்.

இருப்பினும், அஜித்தின் தீவிரமான ரசிகையான ஸ்ருதி, அவருடன் தான் நடிக்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக கூறி வருபவர், அஜித் ஒரு நல்ல மனிதர். சூப்பர் ஹீரோ என்றெல்லாம் அஜித்தை ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளி வருகிறார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions