அஜீத்துடன் ஸ்ருதிஹாசன் டூயட் உறுதி!

Bookmark and Share

அஜீத்துடன் ஸ்ருதிஹாசன் டூயட் உறுதி!

டைரக்டர் வீரம் சிவாவுக்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட் உள்ளது. அதனால்தான் தான் தமிழில் இயக்கும் படங்களுக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் கதாநாயகியாக தேடிப்பிடித்து புக் பண்ணுவார்.

அந்த வகையில் தமிழில் தான் இயக்கிய சிறுத்தை, வீரம் என்ற இரண்டு படங்களிலும் தமன்னாவை நடிக்க வைத்தார். அந்த படங்கள் தெலுங்கிலும் ஓரளவு ஓடியது. அதனால் மீண்டும் அஜீத்தை இயக்கும் படத்திற்கும் அவர் தமன்னாவைத்தான் புக் பண்ண நினைத்தார்.

ஆனால், தற்போது தமிழைப் போலவே தெலுங்கிலும் தமன்னாவின் மார்க்கெட் சரிந்துதான் கிடக்கிறது. அதனால் அது ஒர்க்அவுட் ஆகவில்லை.அதையடுத்து, யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோதுதான் தற்போது விஜய்யுடன் புலியில் நடித்துக்கொண்டிருக்கும ஸ்ருதிஹாசன் நினைவில் வந்தாராம்.

தெலுங்கிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அஜீத், ஏ.எம்.ரத்னம் இருவருமே உடனே ஓகே சொல்லிவிட்டார்களாம். அந்த வகையில், அஜீத்தின் புதிய படத்தில் நடிப்பதற்கு தற்போதைய நிலவரப்படி ஸ்ருதிஹாசன், சந்தானம் ஆகிய இரண்டுபேர் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions