அஜித்துடன் இணைந்த சிம்பு

Bookmark and Share

அஜித்துடன் இணைந்த சிம்பு

அஜித்தின் மீது தீவிர பற்று உடையவர் நடிகர் சிம்பு. அஜித் படம் வெளியாகும் முதல்நாளே அவருடைய படத்தை பார்க்கும் முதல் ரசிகனாக இன்றும் இருந்து வருகிறார் சிம்பு. அஜித்துடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையும் சிம்புவுக்கு உண்டு.

இந்நிலையில், இருவரும் முதல்முறையாக இணையவிருக்கிறார்கள். இது படத்தில் அல்ல. திரையரங்குகளில். அதாவது, வருகிற பிப்ரவரி 5-ந் தேதி அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. அன்றைய தினத்தில் இருந்து, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசரை திரையரங்குகளில் வெளியிடவிருக்கின்றனர்.

‘இது நம்ம ஆளு’ படத்தை ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த வருடத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. 


Post your comment





Related News
அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
அஜித் வாய்ப்பை பிடித்த சிம்பு!
அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்
அஜித்-சிம்பு பற்றி திட்டிய விவகாரம் - கருத்து கூறிய நடிகர் ஸ்ரீகாந்த்
சிம்புவை உலகளவில் உச்சரிக்க வைத்த அஜித் ரசிகர்கள்!
அஜித் பிறந்தநாளில் சிம்பு தரும் சர்ப்ரைஸ்!
நயன்தாராவுக்கு வயது 30!
தல 55ல் சிம்புவை கழட்டிவிட்ட கௌதம் மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions