அஜித் பிறந்தநாளில் சிம்பு தரும் சர்ப்ரைஸ்!

Bookmark and Share

அஜித் பிறந்தநாளில் சிம்பு தரும் சர்ப்ரைஸ்!

நடிகர் சிம்பு, அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது படத்தை எங்கிருந்தாலும் முதல்நாள், முதல்ஷோவில் பார்த்துவிடுவார். அதேப்போல் அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவருக்கு வாழ்த்து சொல்ல தவறியதில்லை.

தற்போது அவரது நடிப்பில் வாலு படம் வெளியாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா மோத்வானி, சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் கிடப்பில் இருந்த இப்படம், வருகிற மே 9ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக வாலு படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி போனது, அதில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் ஒன்று. அஜித் பிறந்தநாளில் படத்தை தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை டிரைலரையாவது ரிலீஸ் செய்வோம் என்று எண்ணியுள்ளார் சிம்பு.

ஏற்னவே இப்படத்திற்கு ஒரு டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் இப்போது இரண்டாவது டிரைலரை, அஜித் பிறந்தநாளுக்காக ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய இருக்கிறார் சிம்பு.


Post your comment





Related News
அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
அஜித் வாய்ப்பை பிடித்த சிம்பு!
அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்
அஜித்-சிம்பு பற்றி திட்டிய விவகாரம் - கருத்து கூறிய நடிகர் ஸ்ரீகாந்த்
சிம்புவை உலகளவில் உச்சரிக்க வைத்த அஜித் ரசிகர்கள்!
அஜித்துடன் இணைந்த சிம்பு
நயன்தாராவுக்கு வயது 30!
தல 55ல் சிம்புவை கழட்டிவிட்ட கௌதம் மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions