அஜித்துக்கு ரசிகர்கள் அன்பான வேண்டுகோள்

Bookmark and Share

அஜித்துக்கு ரசிகர்கள் அன்பான வேண்டுகோள்

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

இந்நிலையில், நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தல ரசிகர்கள் அஜித்துக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அதாவது, ‘மங்காத்தா’ படம் முதல் ‘என்னை அறிந்தால்’ படம் வரை அஜித் தனது தலைமுடியை சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் வைத்து நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த ஸ்டைலை வெகுவாக ரசித்த ரசிகர்கள் தற்போது, இந்த ஸ்டைலில் இருந்து அஜித் மாறவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதனால், அஜித் தற்போது நடிக்கவிருக்கும் சிறுத்தை சிவா படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் இருந்து மாறி, நடிக்கவேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோள். இதை அஜித் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions