அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கும் சிவா?

Bookmark and Share

அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கும் சிவா?

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், அஸ்வின், வித்யூலேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று இரவு வெளிவரவுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு தகவலாக அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

'தல 56' படப்பிடிப்பில் இயக்குனர் சிவாவிடம் அஜித், "உங்களுடைய படப்பிடிப்பில் டென்ஷன் இல்லாமல் ரொம்ப ரிலாக்ஸா இருக்கேன். இன்னொரு கதை இருந்தால் சொல்லுங்க. பண்ணலாம்" என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவுடன் இயக்குனர் சிவா மிகவும் நெகிழ்ந்து போய், "கண்டிப்பாக சார்" என்று தெரிவித்திருக்கிறார்.

அஜித்தின் இந்த பேச்சால் மீண்டும் இயக்குனர் சிவாவுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா?
தலைக்கு முதலிடம் ஆனால் தளபதிக்கு இரண்டு இடம் - குஷியில் தல தளபதி ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions