ரியல் ஹீரோ என்று நிருபித்த அஜித், சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ரியல் ஹீரோ என்று நிருபித்த அஜித், சிவகார்த்திகேயன்!

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது வாழ்கையை ஒரு டி.வி. நிகழ்ச்சியின் மூலம் தொடங்கி இன்று ஒரு பிரபல நடிகரில் ஒருவராக திகழ்கிறார்.

இந்த பெறுமை முழுவதும் அவருக்கே உரியதானது. தன் கடின உழைப்பாளும், தன் ஒப்பற்ற பேச்சு திறமை தான் இவரை தமிழ் சினிமாவில் இந்த தொட முடியாத உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மக்களுக்கு சத்தம் இல்லாமல் உதவிகளை பல செய்து வருகிறார். சமீபத்தில் கன மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை அளித்தார். மேலும் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு 5 லட்சம் நிதி உதவியையும் அளித்தார்.

தற்போது சென்னையை விட கடலூரில் தான் மக்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருடைய கவனம் தற்போது தான் கடலூரை கவணிக்க துவங்கியுள்ளது. ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் இருந்தே பல உதவிகளை சென்னை மக்கள் மட்டும் இல்லாமல் கடலூர் மக்களுக்கும் நிவாராண உதவியை செய்துள்ளார்.

இதனை ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என்ன சார் கடலூரில் எங்கு சென்றாலும் உங்களை பற்றி தான் பேச்சு’ என்று கூறியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் தன் உதவி செய்ததை எந்த ஒரு விளம்பரமும் செய்யாமல் உதவி செய்து இருப்பது அனைவரையும் வியப்பு அடைய வைத்துள்ளது.

நடிகர் அஜித்தும் மழையின் போது இதுபோல் தான்,  தன் வீட்டில் 180 பேரை தன் வீட்டில் தங்கவைத்து, அவர்களுக்கு உணவு, உடை என பல உதவிகளை பாதிப்படைந்த மக்களுக்கு செய்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


Post your comment





Related News
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்!
அஜித் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்!
மேடையில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் !
அஜித் என்று சொன்னாலே விசில் பறக்கும் – சிவகார்த்திகேயன் பேட்டி!
வேதாளம் படத்தை பார்த்து மகிழ்ந்த பிரபலங்கள்
சிவகார்த்திகேயனுக்கு அஜித் அட்வைஸ்
பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions