அஜீத் புகழ் பாடும் எஸ்.ஜே.சூர்யா!

Bookmark and Share

அஜீத் புகழ் பாடும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம் வாலி. அந்த படத்தில் அஜீத், சிம்ரன், ஜோதிகா நடித்திருந்தனர். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் அறிமுகமான ஜோதிகா ராசியான நடிகையானார்.

அதோடு, எஸ்.ஜே.சூர்யா பின்னர் விஜய்-ஜோதிகா நடிப்பில் குஷி என்ற படத்தை இயக்கி அதையும் ஹிட்டாக கொடுத்தார். ஆனபோது, அதையடுத்து அவர் விஜய், அஜீத்தை வைத்து படம் இயக்கவில்லை.

இருப்பினும் இப்போதும் அவர்களுடன் நட்பு வளர்த்து வரும் எஸ்.ஜே.சூர்யா, அஜீத்தைப்பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார். அதாவது, உதவி இயக்குனர்களை அவர் ரொம்பவே மதிக்கக்கூடியவர்.

நான் உதவி இயக்குனராக பல படங்களில் ஒர்க் பண்ணியபோதே என்னை கவனித்து வந்துள்ள அஜீத், வாலி கதையை அவரிடத்தில் சொன்னதும் உடனே நடிக்க கால்சீட் கொடுத்தார்.

அதோடு, அதுவரை நான் பஸ்ஸில் சென்று கொண்டிருந்ததை அறிந்து எனக்கு பைக் வாங்கிக்கொடுத்தார். அதன்பிறகு படம் ஹிட்டானதும் அவரே கார் வாங்கிக்கொடுத்தார்.

அப்போது வளர்ந்து வரும் இயக்குனராக இருந்த எனக்கு அது பெரிய உதவியாக இருந்தது என்று சொல்லும் எஸ்.ஜே.சூர்யா, இப்போதுகூட தனது உதவியாளர்களுக்கு அஜீத் வீடு கட்டிக்கொடுத்து வருகிறார். இதற்கெல்லாம் ரொம்ப பெரிய மனது வேண்டும் என்று அஜீத்தை மீடியாக்களில் பெருமையாக சொல்லி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions