அஜீத் மகனுக்கு பிறந்த நாள் சான்று: மாநகராட்சி வழங்கியது

Bookmark and Share

அஜீத் மகனுக்கு பிறந்த நாள் சான்று: மாநகராட்சி வழங்கியது

அஜீத்–ஷாலினி தம்பதிக்கு கடந்த 2–ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்களுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தார்கள். அடுத்து குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன.

தங்களின் முதல் பெண் குழந்தைக்கு ஜாதகம் கணித்து அனோஷ்கா என பெயரிட்டனர். தற்போது ஆண் குழந்தைக்கும் ஜாதகம் கணித்து பெயர் தேர்வு செய்து வருகிறார்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர் வைக்கின்றனர். இதற்காக நிறைய பெயர்களை பரிசீலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி, கையெழுத்திட்டு அஜீத் மகனுக்கு பிறந்த நாள் சான்றிதழ் வழங்கியுள்ளார். அந்த சான்றிதழில் தந்தை பெயர் அஜீத்குமார் என்றும் தாயார் பெயர் ஷாலினி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. திருவான்மியூர் வீட்டு முகவரி, குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முகவரி போன்றவையும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அஜீத் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கியுள்ளன. 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions