அஜித் படத்தில் சூரி

Bookmark and Share

அஜித் படத்தில் சூரி

'வீரம்' படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் சிவாவும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  இன்று துவங்குகியது. அஜித் ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தில் காமெடியனாக நகைச்சுவை கேரக்டரில் சந்தானம் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.

தற்போதைய தகவலின்படி தல 56 படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. ஹீரோவாக அவர் வேறு படங்களில் மிகவும் பிசியாக இருப்பதால் அஜித்துடன் இப்படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

தொடர்ந்து 30 நாட்கள் டேட் கேட்டதால் அவரால் டேட்ஸ் ஒதுக்க முடியவில்லையாம். இதனால் அந்த கேரக்டரில் நடிக்க இப்போது சூரியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சந்தானத்தின் ஆஸ்தான டைரக்டர் சுந்தரி.சியின் அரண்மனை 2 படம் சூரியைத் தேடி வந்த நிலையில் அடுத்த ஜாக்பாட்டாக அஜித் படத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்! சூரி ஏற்கெனவே அஜித்துடன் ’ஜி’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அப்போது சூரியை யாருக்கும் தெரியாது. அஜித்துக்கும் தெரியாது. சூரி முன்னணி காமெடி நடிகரான பிறகு அஜித்துடன் நடிக்கும் முதல் படம் இது தான்! இப்படத்திற்காக அனிருத் இசையில் ஒரு பாடல் ரெடியாகி விட்டதாம்.

அஜித் ஸ்ருதிஹாசன் பங்கேற்கும் அந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் அஜித்துக்கு தங்கச்சியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுடன்தான் தல 56 படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions