பெண்கள் பிரச்சனையில் பல்கேரியா போலீஸிடம் சிக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் – அஜித் உதவியால் வெளியே வந்தார்?

Bookmark and Share

பெண்கள் பிரச்சனையில் பல்கேரியா போலீஸிடம் சிக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் – அஜித் உதவியால் வெளியே வந்தார்?

பல்கெரியா நாட்டில் நடந்து வரும் அஜித்தோட 57 வது படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில்  இருந்து வழக்கமாக  போட்டோ  தான் ரிலீஸ் ஆகி ட்ரெண்ட் ஆகும். ஆனால்  இந்த  முறை அஜித்  தீர்த்து  வைத்த  பஞ்சாயத்து  ஒன்று  லீக்  ஆகி  சினிமா  வட்டாரத்தில் வைரல் ஆகி இருக்கிறது . 

இயக்குனர் வீரம்  சிவா  இயக்கத்துல அஜித்  நடித்து  வருகிறார். இன்னும் பெயர்  சூட்டப்படாத  இப்படத்தின்  படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில்  நடந்து வருகிறது. படப்பிடிப்பு  தளத்தில் அஜித் ஆர்ம்ஸ் தெரிய  எடுக்கப்பட்ட போட்டோ  ஒன்று வெளியாகி அது ஆன்லைனில் ட்ரெண்ட் ஆனது.  

பல்கேரியா  நாட்டில் தற்போது  நடந்து வரும் படப்பிடிப்பிற்காக 50 பேருக்கு  மேல்  இருந்து  சென்றுள்ளனர். அதிகமான  ஆக்ஷன்  காட்சிகள் உள்ளதால் தற்போது  அதுவே படமாக்கப்பட்டு வருகிறது.  

எப்போதுமே  அஜித்  படங்களுக்குச் சண்டை  காட்சிகளை வடிவமைப்பவர் பைட் மாஸ்டர் சில்வா தான். இந்த  படத்திற்கும்  அவர் தான் மாஸ்டர். மருத்துவமனையில் வார்டு  பாயாக இருந்து  வாழ்க்கையை  துவங்கிய சில்வா,பின்னர் சினிமாவிற்குள்  குரூப் டான்ஸராக நுழைந்தார். ஆனால்  டான்ஸ்  மாஸ்டர் யூனியனில் சேர பணம் இல்லாததால் ஸ்டன்ட்  மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.ரன் , திருமலை,அந்நியன் ,சிவாஜி  போன்ற  படங்களில் பணியாற்றிய சில்வாவை எஸ். எஸ். ராஜமௌலி  தான் அவர்  இயக்கிய எமதுங்கா என்ற  தெலுங்கு  படத்தின்  மூலம் முதல் முறையாக   ஸ்டென்ட் மாஸ்டராக  அறிமுகப்படுத்தினார். 

அதன்  பிறகு  பல்வேறு  படங்களுக்கு  அவர்  பணியாற்றினாலும் மங்காத்தா  படத்திற்கு  பிறகு ஒரே  நேரத்தில்  அஜித், விஜய்  படங்களுக்குச் சண்டைக்காட்சி வடிவமைக்கும்  அளவுக்கு   தமிழில்  முன்னணி மாஸ்டராக உயர்ந்தார். இப்போது அஜித்தின் 57வது படத்திற்கு  பிரச்சனையும்  அவர்  மூலமாகவே  வந்துள்ளது.

இது குறித்துப் பேசிய திரை  பிரமுகர்  ஒருவர், “இன்று தமிழ்  சினிமாவின்  முன்னணி ஸ்டென்ட்  மாஸ்டர்  என்றால்  அது சில்வா   தான்.  வேலையில அப்படி ஒரு ஒழுங்கு இருக்கும். காலையில 6 மணிக்கு  எல்லாம் ஸ்பாட்ல  இருப்பாரு. அதனால  தான்  ரஜினி ,அஜித்  விஜய்ன்னு பெரிய  நடிகர்கள்  படத்துக்கு எல்லாம் அவரை கூப்பிடுறாங்க. 

அஜித் படத்துக்காகப் பல்கெரியா போன போது அங்க  பெண்கள்  சம்பந்தமா  ஒரு பிரச்சனையில சிக்கிட்டாரு. அந்த  நாட்டு  போலீஸ்  ரொம்ப ஸ்டிரிக்ட். இவரை  கைது  பண்ணி  கூட்டிட்டு  போயிட்டாங்க . அப்புறம் தான்  யூனிட்ல உள்ளவங்க அஜித் கிட்ட விஷயத்தை  கொண்டு போயிருக்காங்க உடனடியா  கிளம்பி  போய்த் தெரிந்தவர்கள்  மூலமா சில்வாவை  வெளிய  கொண்டு வந்துருக்காரு.

ஆனா சில்வாவை நாட்டை  விட்டு உடனடியா  வெளிய  போகச் சொல்லி இருக்கு அந்த ஊரு போலீஸ் .உடனே  அவருக்கு  டிக்கெட்  போட்டு அனுப்பிவச்சு இருக்காங்க .அன்னைக்கு  அஜித்  மட்டும்  இல்லன்னா சில்வா வெளியவே  வந்து  இருக்க  முடியாது” என்று சொல்லி முடித்தார்  

இது குறித்துச் சில்வாவிடம் பேசினோம். “ஏன் என்னை பத்தி  இப்படி வதந்தியை பரப்புறாங்கன்னு தெரியல. நீங்க  சொல்லி தான் இப்படி ஒரு விஷயம் போய்கிட்டு  இருக்கிறதே எனக்குத் தெரியும். அஜித்  சார் கூட  இத  கேட்டா   சிரிப்பாரு.வழக்கமா ஏற்படுற டேட்  பிரச்சனை  தான் இந்த  படத்துலையும்.

வீரம் படத்துல கூட  அஜித்  சார்ட்ட  சொல்லிட்டு தான் வேற  படத்துக்கு  போனேன்.அதே  மாதிரி தான்  இந்த  படத்துக்கு இடையில  ரஜினி  சாரோட 2.0 படத்துக்கு வேலை இருந்ததுனால ஒரு 6 நாள் போக வேண்டி  இருந்தது.அஜித்  சார்ட்ட கேட்டு  அவரு சரின்னு சொன்ன  பிறகு தான்  போனேன். இது யூனிட்ல  இருந்தவங்க  எல்லாருக்கும் தெரியும் எனச் சொல்லி முடித்தார்  


Post your comment

Related News
விஜய் சார் சொன்ன ஆறுதலால் தான் என் தங்கை சாப்பிட்டார்- பிரபல கலைஞர் உருக்கம்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
இந்த பிரபல நடன மாஸ்டர் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?
அஜித்தின் மாஸான உடலமைப்பு- மனம் திறந்து பேசிய உடற்பயிற்சியாளர்
அஜித் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வார் – கலா மாஸ்டர் நெகிழ்ச்சி!
படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்
மானாட மயிலாட 10வது சீசனில் இருந்து விலகும் கீர்த்தி
வில்லனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions