அஜீத்தின் 'என்னை அறிந்தால்' ஏன் சூப்பர் ஹிட்டாகும் தெரியுமா?

Bookmark and Share

அஜீத்தின் 'என்னை அறிந்தால்' ஏன் சூப்பர் ஹிட்டாகும் தெரியுமா?

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் ஏன் ஹிட்டாகக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் ரிலீஸாக இன்னும் சில மணிநேரமே உள்ளது.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் என்னை அறிந்தால் காய்ச்சலில் உள்ளனர். திரும்பும் பக்கம் எல்லாம் என்னை அறிந்தால் பேனர்கள், போஸ்டர்களை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இந்த படம் ஏன் ஹிட்டாகக்கூடும் என்பதற்கான காரணங்கள் வருமாறு, அஜீத்-கௌதம் மேனன் சேர்ந்து பணியாற்றியுள்ளது இது தான் முதல் முறை. அஜீத்படங்களின் வசூலின் துவக்கம் சூப்பராக இருக்கும். கௌதம் படங்களின் துவக்கம் சுமாராக இருந்தாலும் அதன் பிறகு பிக்கப்பாகிவிடும்.

அஜீத்தின் மாஸும், கௌதமின் கிளாஸும் இந்த படம் வெற்றி பெற வழிவகுக்கும்.என்னை அறிந்தால் படம் முதலில் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

அதன் பிறகு பொங்கலுக்கு ஐ படம் ரிலீஸானது. தற்போது இந்த படத்துடன் எந்த பெரிய படமும் ரிலீஸாகவில்லை.வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு பிரிந்த இயக்குனர் கௌதம் மேனனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் தற்போது என்னை அறிந்தால் படத்தில் தான் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. பிஜிஎம் படத்தை புதிய லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.ஜி, கிரீடம், மங்காத்தா ஆகிய படங்களை அடுத்து த்ரிஷா அஜீத்துடன் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் என்னை அறிந்தால்.

அஜீத், த்ரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஜோடி ரசிகர்களிடையே ஏற்கனவே ஹிட்டடித்த ஜோடி ஆகும்.


Post your comment





Related News
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions