ஆந்திராவில் மோதும் அஜித் - சூர்யா

Bookmark and Share

ஆந்திராவில் மோதும் அஜித் - சூர்யா

கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித், அனுஷ்கா, த்ரிஷா, நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் தமிழில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வெளியானது. என்னை அறிந்தால் படம் தமிழில் வெளியிடப்படும் அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ரிலீஸ் தேதி நெருங்கும்வரை பட வேலைகள் திட்டமிட்டபடி முடியாத காரணத்தினால் தமிழில் வெளியான தினத்தில் தெலுங்கில் வெளியாகவில்லை. என்னை அறிந்தால் படம் தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே தெலுங்கில் வெளியிடும் முயற்சி தொடங்கப்பட்டது.

 சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியீடு பற்றி முடிவு செய்தனர். ஒருவழியாக கடந்த 15 ஆம் தேதி அன்று இப்படம் ரிலீஸ் ஆனது.

எந்தவாடு கானி (யாரா இருந்தா எனக்கென்ன) என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 150க்கும் அதிகமான திரையரங்குகளில் எந்தவாடு கானி வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. அஜித் நடித்த படங்களிலேயே தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் இதுதானாம்.

150 தியேட்டர்களில் வெளியான எந்தவாடு கானி தற்போது 75க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் சூர்யாவின் மாஸ் படத்தின் தெலுங்கு டப்பிங்கான ராக்ஷஷடு வெளியாகிறது. ஆக.. அஜித் - சூர்யா ஆந்திராவிலும் மோதுகிறார்கள்.


Post your comment





Related News
தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!
விஸ்வாசத்துடன் மோத தயாரான சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
அஜித் போல் வேறு யாராலும் முடியாது, அதைவிட அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்களே- சூர்யா புகழாரம்
சூர்யாவை குள்ளர் என திட்டிய அஜித் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!
அஜித் பட பாணியில் உருவாகும் சூர்யா படம்!
ரஞ்சித்தை ஒதுக்கிவிட்டு சூர்யா எடுத்த அதிரடி முடிவு!
அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் - சூர்யா!
அஜித் பதிலுக்காக காத்திருக்கும் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions