அஜித் படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

அஜித் படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

வீரம் படத்திற்கு பிறகு, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் அஜித் 56 தல 56 என்ற பெயரில் படம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அஜித் உடன் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். கூடவே அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் துவங்கியது.

முதற்கட்டமாக அஜித்-லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் இப்படத்தில் டாக்சி டிரைவராக நடிப்பதாகவும், கிட்டத்தட்ட ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா டைப் கதை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் அஜித், டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடிக்கவில்லை, ஸ்ருதிஹாசன் தான் டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடிக்கிறார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்ட படப்பிடிப்பில் லட்சுமி மேனன் கலந்து கொண்ட நிலையில், இப்போது ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் ஸ்ருதி, டாக்ஸி டிரைவராக நடிக்கிறாராம். கோல்கட்டா, சென்னை என இரண்டு விதமான சூழலில் இப்படத்தின் கதை நகருவதாக கூறப்படுகிறது.

வீரம் படத்தில் கொஞ்சம் கிராமத்து சாயலில் நடித்த அஜித், இப்படத்தில் முழுக்க முழுக்க சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கிறாராம்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions