அஜித்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனும் இரண்டாவது தடவையாக அப்பா ஆனார்

Bookmark and Share

அஜித்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனும் இரண்டாவது தடவையாக அப்பா ஆனார்

சுமார் ஏழு வருடங்கள் கழித்து  அஜித் - ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 'குட்டி தல' யின் வருகையால் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது அஜித் குடும்பம். அஜித் ரசிகர்களோ தங்கள் சந்தோஷத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அஜித்க்கு மகன் பிறந்த சந்தோஷ செய்தியை #KuttyThala என்ற ஹேஷ்டேக் மூலம் இந்திய அளவில் டிரென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித்துக்கு ஆண் குழந்தை பிறந்த அதே நேரத்தில்  இயக்குநர் சுசீந்திரனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  

2009 ஆம் ஆண்டு 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை,  ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது மீண்டும் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சுசீந்திரனுக்கும் ரேணுகா என்பவருக்கும் திருமணம் முடிந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

தற்போது இன்று காலை சுசீந்திரன் - ரேணுகா தம்பதிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியில்  திளைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions