இன்று குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

Bookmark and Share

இன்று குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

அஜித்-ஷாலினி தம்பதியருக்கு ஏற்கெனவே அனோஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த வருடம் மார்ச் 2-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த நாள் முதல் அந்த குழந்தைக்கு அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘குட்டி தல’ என பெயரிட்டு செல்லமாக அழைக்கத் தொடங்கினர். 

பின்னர், சில நாட்களில் அஜித்-ஷாலினி தம்பதியர் அந்த குழந்தைக்கு ஆத்விக் என பெயரிட்டனர். அதன்பிறகு நெடுநாட்களாக ஆத்விக் முகத்தை வெளியில் காட்டாத அஜித், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தபோது, ஆத்விக்கின் முகம் வெளியில் தெரிய வந்தது. 

அன்று முதல் அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு அஜித் ரசிகர்கள் ‘குட்டி தல’யை தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு வடிவமைத்து, ரசித்து கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று ‘குட்டி தல’ பிறந்து ஒரு வருடம் ஆகிறது. அதனால் முதல் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் குட்டி தலக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

மேலும், சில மாவட்டங்களில் அஜித் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்யவும் முடிவு செய்துள்ளனர். போஸ்டர்கள் அடித்து ஒட்டியும் தங்களுடைய தலைவனின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் ‘குட்டி தல’ பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். 

 


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions