நட்சத்திர கிரிக்கெட் போட்டி; மக்களிடம் பணம் வசூலிப்பது ஏன்? அஜித் கேள்வி!

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட் போட்டி; மக்களிடம் பணம் வசூலிப்பது ஏன்? அஜித் கேள்வி!

நடிகர் சங்க கட்டட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இதில் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் கேப்டன்களாக களமிறங்குகிறார்கள்.

மேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

அந்தவகையில் அஜித்தையும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்களாம் . ஒருமுறை இதேபோன்று நடிகர் சங்கத்துக்காக நடத்தப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அஜித்திடம் கேட்டபோது,

நடிகர் சங்கத்துக்காக எதுக்கு மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும், நடிகர்கள் இடமே வசூலித்தால் போதும் என அஜித் கூறியதாக ஒரு செய்தி வெளியானது.

எனவே தற்போது நடைபெறும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கும் அஜித்தின் கருத்து இதுவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions