விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!

தல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இம்மான் இசையமைக்க உள்ளார்.

இந்த படமும் வீரம் படத்தை போல கிராமத்து பின்னணியில் உருவாகும் கதையாக இருக்கும் என சிவா கூறியிருந்தார். தற்போது இந்த படத்தில் உள்ள சர்ப்ரைஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவை என்னவென்றால்

1. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள மோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதே ஸ்டுடியோவில்தான் 'வீரம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்தது.

2. விவேகம் படத்தில் பைக் சேசிங், வீரம் படத்தில் ரயில் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது போல இந்த படத்தில் கார் சேசிங் சீன்கள் உள்ளதாம். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கார் சேசிங் வீரர்கள் வரவைக்க உள்ளார்களாம்.

3. வீரம், வேதாளம் படத்தை போல இந்த படத்திலும் அரை மணி நேரத்திற்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாம், இவை தான் படத்திற்கு வலுவான காட்சிகளாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.


Post your comment





Related News
விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions