புதிய படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?

Bookmark and Share

புதிய படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?

‘வேதாளம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் பெரும்பாலான ‘வேதாளம்’ குழுவினர்கள் இணையக்கூடும் எனத் தெரிகிறது.

தற்போது இப்படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சண்டைப் பயிற்சிக்கு ஸ்டண்ட் சில்வா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதில் நயன்தாராவின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் எமி ஜாக்சன் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோரின் பெயர்களும் உள்ளதாக தெரிகிறது. எமி ஜாக்சன், தற்போது ரஜினியின் ‘எந்திரன்-2’, விஜய்யின் ‘தெறி’ படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சனோன், மகேஷ்பாபு உடன் ‘1’ மற்றும் ஷாரூக்கான், கஜோலுடன் உடன் ‘தில்வாலே’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நாயகி தேர்வு முடிந்தபின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும். 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions