அஜித் அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல்

Bookmark and Share

அஜித் அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல்

அஜித் தற்போது நடித்து வரும் வேதாளம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஏதேனும் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்குமாம். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

ஆனால் இதுவரை அஜித் அடுத்து எந்தப்படத்தில் நடிக்கப்போகிறார்? என்பது பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை. இயக்குனர் விஷ்ணுவர்த்தன் என்று சொல்லப்பட்டாலும் அந்தப்படத்தைத் தயாரிப்பது யார்? என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை.

ஏனெனில் அஜித் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என்றும் அதன் காரணமாகவே அடுத்தபடத்தைத் தயாரிப்பவர் யார்? என்பது முடிவாகாமல் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம், அடுத்தபடம் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றும் வேதாளம் வெளியீட்டுக்குப் பிறகு அறிவிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions