அஜித் தவறவிட்ட வெற்றிப்படங்கள்!

Bookmark and Share

அஜித் தவறவிட்ட வெற்றிப்படங்கள்!

யக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்த விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள '24" திரைப்படம் வெளிவந்துள்ளது. முதலில் இந்த படத்தில் விக்ரம் நடித்தார். அவருக்கு ஜோடியாக இலியானா நடித்தார். விக்ரம் குமார் இயக்கினார். ஒரு வாரம் படப்பிடிப்புகூட நடந்தது.

திடீரென படத்துக்கு குட்பை சொல்லிவிட்டு 'தெய்வத் திருமகள்" ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் விக்ரம்.  என்ன செய்வதென தெரியாமல் திகைத்த விக்ரம் குமார்  தமிழ் சினிமாவுக்கு தலைக்குமேல் கும்பிடு போட்டுவிட்டு ஆந்திர மண்ணில் அடைக்கலமானார். 

நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என்று மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கி 'மனம்" என்றொரு தெலுங்கு படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.  இப்போது, விக்ரமை வைத்து இயக்கிய 24-ஐ சூர்யாவிடம் சொல்லி இயக்கி, அவர்மூலம்  மீண்டும் தமிழ் மண்ணுக்கு வந்து இருக்கிறார்.   

இதுபோல தமிழ் நாட்டில் ஹிட் அடித்த படங்களின்  பட்டியலை தூசுதட்டி பார்த்தால் விழிகள் வியப்பால் விரியும்.  முதலில் அஜித்.  இவர்  'வேண்டாம் சாமீ" என்று நடிக்காமல் தவிர்த்த படங்கள் எல்லாமே சர்ப்ரைஸ் சக்ஸஸ்.

பாலசேகரன் இயக்கத்தில் வெளிவந்து விஜய் நடித்த  'லவ்டுடே" படக்கதையை முதலில் கேட்ட அஜித் 'நோ" சொன்னார்.  'ரன்" கதையை  அஜித்திடம் சொன்னார் லிங்குசாமி. அஜித் மறுக்க, மாதவன் நடிக்க படம் பம்பர் ஹிட்.   பாலாவின் 'நந்தா" படத்துக்கான அஜித்தின் போஸ்டர், ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டிவிட்டனர். திடீரென  அஜித் விலகிக்கொள்ள சூர்யாவுக்கு அடித்தது லக். 

ஏவி.எம். தயாரிப்பில் சரண் இயக்கத்தில் பூஜை போட்டு 'ஏறுமுகம்" என்று பெயர்சூட்டி நான்கு நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. திடீரென நின்றுபோன அந்தப்படம்தான் பின்னாளில் விக்ரம் நடிப்பில்  'ஜெமினி"யாக வெளிவந்து ஊரெல்லாம்  'ஓ" போட்டது. 

 


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions