அஜீத்தின் அடுத்த படத்தை பற்றி சுற்றும் வதந்திகள்!

Bookmark and Share

அஜீத்தின் அடுத்த படத்தை பற்றி சுற்றும் வதந்திகள்!

அஜீத்தின் அடுத்தபடத்தை வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார். அந்தப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்று செய்திகள் வந்திருக்கிறது. இது உறுதிதான் என்று சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்கிறார்கள்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் அது பற்றியும் பல்வேறு விதமான பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன. சத்யஜோதி நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு இல்லை, வேறொரு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றொரு பேச்சு இருக்கிறது.

அது மட்டுமின்றி, தன்னுடைய அடுத்தபடத்தின் இயக்குநர் யார் என்பதை அஜீத் இன்னும் முடிவு செய்யவில்லை, சிவாவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார் அவர் மட்டுமின்றி விஷ்ணுவர்தன் மற்றும் இரண்டு இயக்குநர்களும் அஜித்தின் பரிசீலனையில் இருக்கிறார்கள் என்றும் பேச்சு இருக்கிறது.

ஏன் இப்படிச் செய்திகள் வருகின்றன? என்றால், திரையுலகைப் பொறுத்தவரை எவ்வளவோ பேச்சுகள் அடிபடலாம் ஆனாலும் பணம் கொடுத்து ஒருவரை ஒப்பந்தம் செய்தால்தான் உறுதி என்பார்கள்.

இதுவரை அஜித்துக்கு எந்த நிறுவனத்திலிருந்தும் முன்தொகை கொடுக்கப்படவில்லை என்றும் அதனாலேயே இப்படிப்பட்ட பேச்சுகள் உலா வந்துகொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

பல்வேறு யூகங்களுக்குப் பிறகு விஜயகாந்த் தனித்துப்போட்டி என்று சொல்லிவிட்ட மாதிரி அஜீத் படஅறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வந்தால்தான் நிச்சயம் என்கிறார்கள். 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions