அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா?

Bookmark and Share

அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா?

தீபாவளிக்கு அஜித் நடித்த 'வேதாளம்' படம் வெளிவந்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை விட 'வேதாளம்' கொண்டாட்டத்தைத்தான் அதிகம் கொண்டாடினார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர்களின் சொந்த செலவிலேயே திரையரங்குகளை அலங்கரிப்பது, பேனர்கள் வைப்பது என பல விஷயங்களைச் செய்து தியேட்டர்களை திருவிழாக்கோலம் ஆக்கினார்கள்.

பொதுவாக ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிப்பதை அவர்களது சொந்த செலவில் செய்ய மாட்டார்கள். குறிப்பிட்ட நடிகர்தான் ரசிகர் மன்றத்திற்கு பணம் கொடுத்து அனைத்தையும் செய்ய வைப்பார். ஆனால், அஜித் ரசிகர்கள் அவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டு இப்படிச் செய்வது ஆச்சரியமான ஒன்று. அதிலும் அஜித் அவருடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது.

ரசிகர்களின் அளவு கடந்த அன்புக்கும், பாசத்திற்கும் அஜித் என்ன செய்யப்போகிறார். அவர்களது ரசிகர்களே அதை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அஜித்தை ஒரு முறையாவது நேரில் பார்த்து அவரை வாழ்த்த வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அதைக் கூட அஜித் செய்வதில்லை என்ற வருத்தம் அவர்களிடம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எப்படியும் அஜித் காதுக்குப் போய்விடும். ரஜினிகாந்துக்குப் பிறகு ஒரு நடிகர் மீது ரசிகர்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் அன்பு செலுத்துவது அஜித்துக்கு மட்டுமே என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளது.

 


Post your comment





Related News
பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்!
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்
’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்?
லட்சுமிமேனனுக்கு போனஸ் வழங்கிய அஜீத்!
அஜித்திடம் உள்ள கெத்து வேறு எவரிடமும் இல்லை என்பதற்கான 6 உண்மைகள்
அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்கள்
படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”
வேதனையில் அஜித் ரசிகர்கள் - காரணம்
நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!
முதல் முறையாக தல அஜீத் படத்துக்குக் கிடைத்த வாய்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions