அஜித்தின் அடுத்த படம் பற்றிய ரகசியம் வெளியானது!

Bookmark and Share

அஜித்தின் அடுத்த படம் பற்றிய ரகசியம் வெளியானது!

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித்திற்கு கடைசியாக வெளியான படம் வேதாளம். இப்படத்திற்குப் பிறகு அஜித்தின் அடுத்த படம் பற்றியான தகவல்கள் தாறுமாறாக இணையத்தில் வெளியாகிவருகிறது. 

அஜித்தை அடுத்து இயக்கவிருக்கும் இயக்குநர் யார் என்பதே இன்றைய இணைய லேட்டஸ்ட் டாபிக். இயக்குநர் சிவா இயக்கவிருப்பதாகச் சொல்லிவரும் நிலையில் விஷ்ணுவர்தனும் அஜித்திற்காக ஒரு கதை தயார் செய்துவருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என்ற ஹிட் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவரின் அடுத்தபடத்திற்காக எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து பணியாற்றிவருகிறார்  என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் ஹீரோ யாரென்பதை எழுத்தாளர் பாலகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “ அஜித்குமாருக்காக கதை அமைத்துவருவது உண்மைதான்.

ஆனால் அது,தஞ்சை பெரியகோவில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ இல்லை,  ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதையையே வடிவமைத்துவருகிறோம்” என்று பாலகுமாரன் கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் படத்தை அஜித் ஓகே செய்வாரா? அஜித்தின் அடுத்த படம் சிறுத்தை சிவாவுடனா அல்லது விஷ்ணுவர்தனுடனா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions