
அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக செய்தி பரவி வருகிறது.
அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ ஆகிய 4 படங்களையும் ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
தற்போது அவருக்கு விடை கொடுத்துவிட்டு ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய வெற்றிப்படங்களால் சிறுத்தை சிவாவிடம் மயங்கிப் போன அஜித், அவருக்கே தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை படத்தைதான் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இது அதிகாரப்பூர்வமில்லாத தகவல் என்றாலும், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்களாம்.
அஜித்துக்கு தற்போது காலில் ஆபரேஷன் நடந்து ஓய்வு எடுத்து வருகிறார். டாக்டர்கள் அவரை 3 மாத காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார்களாம். எனவே, அடுத்த வருடத்தின் ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post your comment