அஜித் பேயா? இணையத்தைக் கலக்கும் வேதாளம் கதை!

Bookmark and Share

அஜித் பேயா? இணையத்தைக் கலக்கும் வேதாளம் கதை!

அஜித்தின் வேதாளம் படத்தின் பாடல்கள் நள்ளிரவு 12 மணிக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அனிருத் பிறந்தநாளில் வெளியானதால் ரசிகர்கள் ‪#‎VedalamAlbumWithAniBdayBash‬ என ட்ரெண்டை உருவாக்கிக் கொண்டாடினர்.

இந்நிலையில் படத்தின் கதைக் குறித்தப் புதுத் தகவல்கள் கசிந்து வருகின்றன. பாட்ஷா பாணியில் ஒரு தாதா ஃப்ளாஷ் பேக், பின்னர் எதுவும் வேண்டாம் என அவர் கல்கத்தாவில் தங்கையுடன் இருக்கிறார் இப்படி ஒரு கதை உலாவி வர இடையில் அஜித் பேயாக நடிக்கிறார் என இன்னொரு கதையும் உலா வருகிறது. 

எனினும் அது கமர்ஷியல் கதைதான் பேய்க் கதையில்லை என நெருங்கிய வட்டாரங்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

அந்த வகையில் கல்கத்தாவில் இருக்கும் அப்பாவி டாக்ஸி டிரைவர் அஜித்துக்கும் அவரது தங்கை லட்சுமி மேனனுக்கும் ரவுடிகளால் பிரச்னை வர, அதில் லட்சுமி மேனன் இறந்துவிடுகிறார்.

உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் அப்பாவி அஜித்துக்கு இன்னொரு அஜித்தின் ஆவி நட்பாக உதவி பின் என்ன நடக்கிறது, என்பது தான் கதை.
இப்படி ஒரு வேதாளா கதையும்  தற்போது இணையங்களில் பரவி வருகின்றன.

 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions