அஜித் எனக்கு அண்ணன் மாதிரி: பிரபல நடிகர் ஓபன் டாக்

Bookmark and Share

அஜித் எனக்கு அண்ணன் மாதிரி: பிரபல நடிகர் ஓபன் டாக்

அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் கபீர் சிங். இவருடைய ஸ்டைலீஷான வில்லத்தனமான நடிப்பு இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. அதுபோல் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துள்ள ‘சர்தார் கப்பார் சிங்’ படத்திலும் கபீர் சிங் வில்லனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் நடித்த அனுபவம் குறித்து கபீர் சிங், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அஜித்தும், பவன் கல்யாண் இருவரும் பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் என்னிடம் மூத்த சகோதரர்கள் போல பழகினார்கள்.

‘வேதாளம்’ படப்பிடிப்பின் இறுதியில் படக்குழுவினர் சுமார் 200 பேர்களுக்கும் அஜித் உணவு சமைத்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல் பவன்கல்யாண் என்னிடம் அடிக்கடி நலமாக இருக்கிறீர்களா? என அன்புடன் விசாரிப்பார். இருவருமே என்னை சக நடிகராக பார்க்காமல் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்து கவனித்துக் கொண்டனர்.

கடவுளின் அருளால் தற்போது நான் பிசியாக இருக்கின்றேன். ‘வேதாளம்’ வெற்றிக்கு பின்னர் எனக்கு பல தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் வரும் ஏப்ரல் வரை நான் பிசியாக இருப்பதால் என்னால் புதிய தமிழ்ப்படங்களில் கமிட் ஆக முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions