மீண்டும் அஜித்துடன் இணையும் தமன்னா!

Bookmark and Share

மீண்டும் அஜித்துடன் இணையும் தமன்னா!

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவா இயக்கபோவது உறுதியாகிவிட்டது. முதலில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வீரம் படத்தில் நடித்த தமன்னாவே நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த முறையான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் 16 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இதற்குமுன்னர் இவர்கள் இருவரும் உயிரிலே கலந்தது எனும் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப்படம் வெளிவந்த ஆண்டு 2000. அதன்பிறகு இந்த படத்தில்தான் இருவரும் இணைகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions