புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!

Bookmark and Share

புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!

நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் புதிய படங்களின் கதை மற்றும் தோற்றங்களை ரகசியமாக வைத்து இருப்பது வழக்கம்.

அவைகள் வெளியானால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பது அவர்கள் கணிப்பு. ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது திருட்டுத்தனமாக அதை படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர்.

இதனால் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் தோற்றம் ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படப்பிடிப்பையும் படக்குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கி பாதுகாப்புடன் நடத்தி வருகிறார்கள். படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பும் ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இது அஜித்குமாரின் 57-வது படமாகும்.

இதில் சர்வதேச போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பில் அஜித்குமார் நடித்த காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

ரகசியமாக வைத்திருந்த அஜித்குமார் தோற்றம் இதன்மூலம் வெளிப்பட்டுவிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். காஜல் அகர்வாலும் இந்த படத்தில் நடித்தபோது எடுத்த சில படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்ததும் டைரக்டர் சிவா கோபமடைந்து காஜல் அகர்வாலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படங்களை டுவிட்டரில் இருந்து காஜல் அகர்வால் நீக்கி விட்டார். 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions