அஜித்தை நெகிழ வைத்த ஓவியர் தேவா!

Bookmark and Share

அஜித்தை நெகிழ வைத்த ஓவியர் தேவா!

பிரபல கலை இயக்குனர்கள் தோட்டாதரணி, கிருஷ்ணமூர்த்தி, சாபு உள்பட பல ஜாம்பவான்களிடம் உதவி கலை இயக்குனராக சுமார் 80 படங்களில் பணியாற்றியிருப்பவர் தேவா.

இவர் ஒரு ஓவியரும்கூட. தான் தனித்து கலை இயக்குனராக வேலை செய்வதற்காக நல்ல சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்த தேவா, தமிழ்சினிமாவின் பெரும்பாலான பிரபல நடிகர், நடிகைகள், டைரக்டர்களை ஓவியமாக வரைந்து கொடுத்து அவர்களின் மனதிலும் இடம்பிடித்து வருகிறார்.  அதுபற்றி அவர் கூறுகையில்  சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நான் ஓவியராக இருந்தேன்.

கேரளா சென்று முறையாக ஓவியக்கலையை பயின்று விட்டு ஒரு ஓவியராகத்தான் சினிமாவிற்குள் வந்தேன். சினிமாவைப்பொறுத்தவரை இயக்குனருக்கு பிறகு ஆர்ட் டைரக்டர்தான். அந்த அளவுக்கு கலையின் பங்களிப்பு படங்களில் உள்ளது. முன்பெல்லாம் ஆர்ட் டைரக்டர்கள்தான் நடிகர் நடிகைகள் எந்த மாதிரி காஸ்டியூம் அணிய வேண்டும் என்றே சொல்வார்கள்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இன்றைக்கு அது அப்படியே மாறி கேமராமேன்கள் காஸ்டியூம் சொல்கிறார்கள். மேலும், இப்போது கலை இயக்குனரே இல்லாமல் படம் பண்ணுகிறார்கள்.

அந்த மாதிரி இயக்குனர்களால் நல்ல தரமான படைப்புகளை தர முடியாது. அதோடு இப்போது ஆர்ட் டைரக்டரை மட்டமாக பார்க்கிற நிலையும் உருவாகியிருக்கிறது. நான் சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்றுதான் வந்தேன்.

ஆனால் இன்றைக்கு சினிமா போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது. சமீபத்தில் வெளியான பாகுபலி படமெல்லாம் இந்த அளவுக்கு பிரமாண்டமாக வந்துள்ளது என்றால் ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம்தான் காரணம். அந்த படம் இந்திய சினிமாவின் உச்சமாகியிருக்கிறது. இன்றைய இளவட்ட டைரக்டர்களெல்லாம் அந்த படத்தை பார்க்க வேண்டும்.

அதேபோல் விஜய்யின் புலி படத்தை இயக்கியிருக்கும் சிம்புதேவன் ஓவியராக இருந்துதான் இயக்குனரானவர். அவருக்கு தெரியும் ஒரு ஆர்ட் டைரக்டரின் வேல்யூ. அதே மாதிரி டைரக்டர் சுசீந்திரனும் ஆர்ட் டைரக்டரின் பெருமை தெரிந்தவர். அவர்களை மதிக்கக்கூடியவர்.  

அந்த வகையில், பாயும்புலி படத்திற்காக போட்டோ செஷன் செய்தபோது, உனக்கு எந்த மாதிரி தேவையோ அந்த மாதிரி விஷாலை நிற்க வைத்து ஓவியம் வரைந்து கொள் என்றார். இன்றைக்கு இந்த அளவுக்கு எந்தவொரு இயக்குனரும் ஓவியருக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். அதை சுசீந்திரன் செய்தார்.

பாயும் புலி படத்தில் ராஜீவன் கலை இயக்குனர். நான் ஓவியம் வரைவதற்காகத்தான் சென்றேன்.   நீங்கள் ஓவியராக இருப்பது கலைக்கு எந்தெந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது? என்று அவரைக்கேட்டால்  ஓவியராக இருந்தால் மட்டும்தான் கலை இயக்குனராக முடியும். நாம் நினைக்கிறதை வரையத்தெரிந்தால் மட்டுமே கலையும் சிறப்பாக இருக்கும். நம்முடைய எண்ணங்கள்தான் வண்ணங்களாக வேண்டும்.  

மேலும், நான் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களை ஓவியமாக வரைந்து அவர்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறேன். அந்த வகையில், அஜித் எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகர். அதனால் அவரை ஒரு ஓவியமாக வரைந்தேன். அவருக்கும் எனக்குமிடையே அதிக நெருக்கம் இல்லை என்பதால், கோவை சரளா அவர்கள் மூலமாக அஜித்தை சந்தித்து கொடுத்தேன்.

அதற்கு முன்பு கோவை சரளா அவர்களையும் ஓவியமாக வரைந்து கொடுத்தேன். அந்த நட்பு அடிப்படையில்தான் அவர் அஜித்திடம் என்னை அழைத்து சென்றார். அப்போது அந்த ஓவியத்தைப்பார்த்து அஜீத் நெகிழ்ந்து போனார். அது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்தது.

ஆக, தமிழ் சினிமாவில் நான் ஓவியம் வரையாத நடிகர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ரஜினி, கமல், சூர்யா, விஜயசேதுபதி, சீமான், சமுத்திரகனி, சரண்யா, ஊர்வசி, கல்பனா என நிறையபேரை வரைந்திருக்கிறேன். சினிமாவில் உதவி கலை இயக்குனராக இருந்தபோதும் எனது ஓவியத்திறமைதான் என்னை இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறது.  

கலை இயக்குனர்களின் தனித்திறமை எந்த மாதிரியான கதைகளில் வெளிப்படும்?  நார்மலான கதைகளில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் சரித்திர கதைகளில் திறமையை காண்பிக்க நிறைய வாய்ப்பு இருக்கும்.1940க்கு முன்பு போனால் பழைய சென்னையை காட்ட வேண்டும். அதேபோல் பழைய கிராமத்தை காட்ட வேண்டும்.

அதேமாதிரி விமல் நடித்த வாகை சூடவா போன்ற கதைகளிலும் கலை இயக்குனரின் திறமை வெளிப்படும். அதையெல்லாம் கலை இயக்குனர்களால்தான் முழுமையாக கொண்டு வர முடியும்.  கலையை வணிக நோக்கில் பார்க்கக்கூடாது.

கலைக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அப்போதுதான் படைப்புகளின் தரம் உயரும். படைப்புகளில் உயிரோட்டம் இருக்கும். கதையை டைரக்டர் பார்த்தால் அந்த கதைக்கும், காட்சிக்கும் பேக்ரவுண்டில் என்ன வேண்டும் என்பதை ஆர்ட் டைரக்டர்தான் பார்ப்பார்.

இதை இப்போதைய இயக்குனர்கள் பலர் புரிந்து கொள்வதில்லை. மேலும், முடியாது என்ற ஒன்றை கலை இயக்குனர்கள் சொல்லவே கூடாது. முடியாது என்று சொல்பவர் இந்த வேலைக்கே வரக்கூடாது. உடனே முடியவில்லை என்றால் கொஞ்சம் டயம் ஆகும் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதை முடித்து விட வேண்டும்.

அவர்கள்தான் கலை இயக்குனர்கள். முடியாது என்று சொல்பவர்களை நான் வேலைக்கே வைத்துக்கொள்ள மாட்டேன்.   உங்களது ரோல் மாடல் யார்?  எனக்கு ரோல் மாடல் கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சார்தான். அவருக்கு நிகர் யாருமில்லை. கலை இயக்குனராய் நிமிர்ந்து நின்றவர்.

1975லேயே ஒரு மலையாள படத்துக்காக தேசிய விருது வாங்கியவர். ஒரு நடிகர் இந்த காட்சிக்கு இந்த மாதிரி காஸ்டியூமில்தான் வரவேண்டும் என்று சொன்னவர் அவர்.

அதேமாதிரி சாபு, ராஜீவன் என பலர் எனக்கு ரோல் மாடலாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் மிலிட்டரி கேம்ப் மாதிரி நடத்தாமல் உதவியாளர்களின் திறமையை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கொடுப்பார்கள்.  

நீங்கள் கலை இயக்குனராக ஒர்க் பண்ணும் முதல் படத்தில் எந்த மாதிரியான கதையம்சம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?  கலை இயக்குனருக்கு வேலை கொடுக்கக்கூடிய படமாக இருக்க வேண்டும்.

இந்த படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன் என்று மார்தட்டி சொல்ல வேண்டும். நிறைய படங்கள் வந்தன. கலைஇயக்குனருக்கு அதிகமான வேலை இல்லாததால் தவிர்த்து விட்டேன்.

அதனால் நான் எதிர்பார்க்கிற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். 1500 ஆர்ட் டைரக்டர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இந்த நிலையில், நிறைய படம் பண்ண வேண்டும் என்பதை விட, ஒரு படம் பண்ணினாலும் பேசப்படும் படத்தில் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என்கிறார் உதவி கலை இயக்குனர் ப்ளஸ் ஓவியரான தேவா.


Post your comment

Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions