எனக்கு அஜித் அப்படி ஒரு விஷயம் செய்தார்

Bookmark and Share

எனக்கு அஜித் அப்படி ஒரு விஷயம் செய்தார்

படங்கள் நடித்து அதன்மூலம் பிரபலமானவர்களை விட சீரியல்கள் மூலம் பிரபலமானவர்கள் நிறைய பேர். அப்படி பிரபல தொலைக்காட்சியில் பகல்நிலவு என்ற சீரியலில் நடித்து வருபவர் மோனா.

இவர் சீரியலை தாண்டி மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிறகு அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்துடன் தனக்கு நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அஜித் பற்றி அவர் பேசும்போது, அஜித்திற்கு என்னுடன் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடிகர் என்பதை தாண்டி ஒரு மனிதராக அவர் மிகவும் நல்லவர். என்னிடம் நான் என்ன செய்கிறேன், அடுத்தடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார்.

என்னுடைய உறவினர் ஒருவர் பைக் ரேஸில் ஆர்வம் உள்ளவர். அவர் அஜித் வீட்டிற்கு சென்றபோது என்னை பற்றி அவரிடம் கூறியுள்ளார். உடனே அஜித் யார் என்று கேட்டுவிட்டு எனக்கு போன் செய்து ஹலோ என்று கூறி பேச தொடங்கினார். நீங்கள் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருந்தீர்கள் எனக்கு அது பிடித்திருந்தது என்றார். அவரின் அந்த போன் கால் என்னால் மறக்கவே முடியாது என்று மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions