குட்டி தலக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்த தல ரசிகர்கள்

Bookmark and Share

குட்டி தலக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்த தல ரசிகர்கள்

அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே அனோஸ்கா என்ற அழகான பெண் குழந்தை இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பிறந்தது முதல் இக்குழந்தையை ரசிகர்கள் அனைவரும் ‘குட்டி தல’ என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர். ஆனால், பெற்றோர்களோ இக்குழந்தைக்கு ஆத்விக் என பெயர் சூட்டினர்.

பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ஆத்விக்கின் புகைப்படத்தை அஜித் எங்கேயும் வெளிவிடவில்லை. அவர் ஒரு புகைப்பட பிரியராக தனது மகனை ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்தும், எந்த புகைப்படமும் இதுவரை வெளியாகமலே இருந்தது. 

கடைசியாக நேற்று முன் தினம் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த அஜித்தை ரசிகர்கள் தங்களது செல்போன்களில் படம்பிடிக்க தொடங்கினர்.

அப்போது, குட்டி தல ஆத்விக்கையும் புகைப்படம் எடுத்து சமூக இணையதளங்களில் பரவ விட்டனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், இன்று மேலும்  சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

ஷாலினிக்கு நெருங்கிய உறவினரான டான்ஸ் மாஸ்டர் சாந்தி, ஆத்விக்கை கையில் வைத்துக்கொண்டபடி எடுக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படம், ஷாலினியுடன் ஆத்விக் விளையாடும் ஒரு புகைப்படம்,

ஊஞ்சலில் ஆடுவது போன்ற புகைப்படம், துணி நாற்காலியில் படுத்துக் கொண்டபடி எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியன இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவாறு பல்வேறு விதங்களில் மெருகேற்றி வருகின்றனர். ‘தல’யைப் போலவே ‘குட்டி தல’க்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions