ரசிகர்கள் சமாளிக்க முடியாமல் அரசாங்க காரில் ஏறிப்போன அஜித்

Bookmark and Share

ரசிகர்கள் சமாளிக்க முடியாமல் அரசாங்க காரில் ஏறிப்போன அஜித்

ஆரம்பம் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு அடிபட்டது.  வலியைப் பொறுத்துக் கொண்டு இரண்டு படங்கள் நடித்துவிட்டார். 'வேதாளம்'  படப்பிடிப்பில், அஜித்துக்கு  அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், உடனடியாக மருத்துவம் செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஆனாலும் வேதாளம் படத்தின் படபிடிப்பை முழுமையாக முடித்த பிறகு  அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அஜித். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்  வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார் அஜித்.

நன்றாக நடக்கிற அளவுக்குத் தயாரானதும் குடும்பத்தினருடன் லண்டன் சென்று சில மாதங்கள் ஒய்வெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக  நேற்று இரண்டாவது மகன் ஆத்விக் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்திருந்தார் அஜித்.   குடும்பத்தினருடன் அஜித் வந்திருக்கும் தகவல் கொஞ்ச நேரத்திலேயே வெளியில் பரவிவிட்டது.

இதனால்  பெரும் கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக கூடியது. பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் அஜித் மற்றும் ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்தன.    

அலுவலகம் முன்பாகப் பெரும் கூட்டம் கூடிவிட்டதால், அஜித்தின் காரில் போனால் ரசிகர்களைத் தாண்டிப் போவது சிரமமாகிவிடும் என்பதால், அங்கிருந்த அதிகாரி தன்னுடைய காரில் அஜித்தை ஏற்றி அனுப்பி வைத்தாராம்.

அதன்பின் சிறிதுநேரம் கழித்து அஜித் மனைவி ஷாலினி மற்றும் அவர்களுடைய குழந்தைகளும் புறப்பட்டுச் சென்றனராம்.


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions