ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்

Bookmark and Share

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுபவர்.

விவேகம் படப்பிடிப்பின்போது அஜீத். ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது.

உலகின் பல்வேறு நாடுகள் ஆளில்லா விமானங்களை இயற்கை பேரிடர் சமயங்களில் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர்.

இந்த குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் தக்‌ஷா குழு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்ஷா குழு பங்கேற்றது.

அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்துள்ளது.

மேலும் அஜித் மேற்பார்வையில் தக்‌ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் 8 நாடுகளை சேர்ந்த 11 குழுக்கள் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க - தமிழ் ராக்கர்ஸ்க்கு கோரிக்கை வைக்கும் பலூன் இயக்குனர்.!
ஹோட்டலுக்கு பணம் தராததால் பணயக் கைதியாக மாட்டிக் கொண்ட படக்குழுவினர்..!
மயானக் கொள்ளையை பார்த்த பூலோகம் படக்குழு..!
விமானத்தில் குடித்து ரகளை: மலையாள கிரிக்கெட் நடிகர்களுக்கு எச்சரிக்கை.!
அஜீத்,தமன்னா,சிறுத்தை சிவா படத்தை தயாரிக்கும் முன்னாள் அமைச்சர்..?
ஏலம் எடுத்தால் நடிகர் விக்ராந்த்தை தான் எடுப்பேன் நடிகை த்ரிஷா..!
‘யு’ சர்டிபிகேட் கிடைத்த சந்தோஷத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படக்குழு..!
கலக்கவரும் \'பீட்சா\', \'சூதுகவ்வும்\' கூட்டணி..!
சி.சி.எல் சென்னை அணி விளம்பர தூதராக த்ரிஷா..!
k.s.ரவிக்குமாரை ஓரங்கட்டிய ‘கோச்சடையான்’ டீம் அமைதி காக்கும் ரஜினி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions