தல 56 படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய அஜித்

Bookmark and Share

தல 56 படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய அஜித்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘தல 56’ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படப்பிடிப்பின் போது கிடைத்த இடைவெளியில் அஜித், தனது படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். 

அஜித் ஒரு சிறந்த கார் பந்தய வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல், சிறந்த பைக் ரைடரும் கூட. விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், நேரம் கிடைக்கும்போதேல்லாம் தனக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் தல 56 படக்குழுவினருடன் அஜித் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தது அவர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. ‘தல 56’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions