
இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்கவும் விருப்பப்பட்டுள்ளார்.
அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக போனி கபூர் தயாரிப்பில் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தி பிங்க் படத்தின் கதையில் அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். வித்யா பாலனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார் என்றும் செய்தி வருகிறது.
தடக் என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்விக்கு தமிழில் இது முதல் படமாக அமைய இருக்கிறது.
Post your comment