ஏப்ரலில் தொடங்கும் அஜித்தின் ’தல 57′!

Bookmark and Share

ஏப்ரலில் தொடங்கும் அஜித்தின் ’தல 57′!

வீரம், வேதாளம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் ‘தல 57’ படத்தை தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இந்த வாய்ப்பை பிரபல சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அஜித் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் தற்போது அறுவைச் சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை. ஏப்ரலில் பூஜை போட்டு மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions