அஜித் ரசிகர்களுக்கு தமன் கொடுக்கும் ஸ்பெஷல் விருந்து

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு தமன் கொடுக்கும் ஸ்பெஷல் விருந்து

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சினிமாவில் மட்டுமல்ல பலதரப்பட்ட மக்களுக்கும் அஜித்தை ரொம்பவும் பிடிக்கும். யாரிடமும் வேறுபாடு காட்டாமல் நெருங்கி பழகுவது, கஷ்டப்படுகிறவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்வது போன்ற நல்ல குணநலன்களால் அஜித் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

அஜித்துக்கு வருகிற மே 1-ந் தேதி பிறந்தநாளாகும். அவருடைய பிறந்தநாளை எப்போதும் அவர் பெரியதாக கொண்டாட மாட்டார். ஆனால், அவரது ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாக எடுத்துக் கொண்டாடுவர். அதேபோல், திரையுலகிலும் சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அஜித்துக்கு தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

அந்த வரிசையில், அஜித்தின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன், அஜித் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கவிருக்கிறாராம். இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு தமன் கொடுக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions