அஜீத் படத்தின் திருட்டு சி.டி.க்கள் விற்பனை: பட அதிபர்கள் போலீசில் புகார்

Bookmark and Share

அஜீத் படத்தின் திருட்டு சி.டி.க்கள் விற்பனை: பட அதிபர்கள் போலீசில் புகார்

அஜீத், அனுஷ்கா, திரிஷா நடித்த என்னை அறிந்தால் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் திருட்டு சி.டி.க்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, துணை தலைவர்கள் கதிரேசன், தேனப்பன், பொருளாளர் தியாகராஜன் விநியோகஸ்தர் மன்னன் ஆகியோர் இன்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமியிடம் புகார் மனு அளித்தனர்.
திருட்டு சி.டி. தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

புகார் அளித்தது குறித்து கலைப்புலி தாணு நிருபர்களிடம் கூறியதாவது:–

அஜீத்தின் என்னை அறிந்தால் பட திருட்டு சி.டி.க்கள் பல இடங்களில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பார்த்த போது கேரளாவில் உள்ள ஒரு தியேட்டரில் திருட்டுத்தனமாக சி.டி.யில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. புதிய தொழில் நுட்பம் மூலம் இதனை கண்டு பிடித்தோம். அந்த தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூப்பிரண்டு ஜெயலட்சுமியிடம் மனு கொடுத்தோம். அவரும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இவ்வாறு கலைப்புலி தாணு கூறினார்.


Post your comment





Related News
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
தடியடியால் மக்களுக்கு ஆர்வம் இல்லை.. களையிழந்தது குடியரசு தின விழா.. வெறிச்சோடியது மெரினா
மூன்று நாளில் ரூ.46.32 கோடி வசூல் செய்த ஏபிசிடி-2
ஹாலிவுட் படத்துடன் வருண் பட டிரைலர் ரிலீஸ்
திருட்டு விசிடி எப்படி வருது தெரியுமா? இதோ இந்த வழியாத்தான்!
ஏப்.,24 முதல் ஏபிசிடி-2 டிரைலர்!
\'இப்பல்லாம் யார் சிடி வாங்கறாங்க\'... கமல் கணிப்பு எப்போதும் தவறுவதே இல்லை!
நடிகர் சங்க செயற்குழு 28–ந்தேதி கூடுகிறது: திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை
திருட்டு விசிடி தயாரித்த 7 சினிமா தியேட்டர்கள்: போலீஸ் அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions