அஜித்துக்கு முகவரி கொடுத்த இயக்குனருக்கு கைகொடுத்த சமுத்திரகனி

Bookmark and Share

அஜித்துக்கு முகவரி கொடுத்த இயக்குனருக்கு கைகொடுத்த சமுத்திரகனி

அஜித் நடிப்பில் வெளிவந்த ’முகவரி’ படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. இப்படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’,  பரத்தை வைத்து ‘நேபாளி’, ஷாமை வைத்து ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் பெரிதளவில் பேசப்பட்டாலும், வி.இசட்.துரைக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை வாரி வழங்கவில்லை. 

இந்நிலையில், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சமுத்திரகனியின் மூலம் வி.இசட்.துரைக்கு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் கிடைத்துள்ளது. வி.இசட்.துரை அடுத்ததாக சமுத்திரகனி நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஏமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. நிறைய பேரை சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது. ஜெயமோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதவுள்ளார். நிதிஷ்-பிரகாஷ் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். சுதர்சன் படத்திற்கு எடிட்டிங்கை செய்யவிருக்கிறார். துபாயை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions