வேதாளம் படத்தில் காமெடியில் கலக்கியிருக்கும் தல அஜித்!

Bookmark and Share

வேதாளம் படத்தில் காமெடியில் கலக்கியிருக்கும் தல அஜித்!

வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகி எனினும் லட்சுமி மேனனும், அஜித்தும் தான் அதிகப்படியான காட்சிகளில் இடம்பெறுகிறார்கள். 3 நிமிடம் வரை ஓடக்கூடிய காட்சி ஒன்றை சிங்கிள் டேக்கில் எடுத்திருக்கிறார்கள். 

அந்தக் காட்சி தான் படத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைகிறது. கோவைசரளா, ஆதித்யா புகழ் பாப்பா, மயில்சாமி, ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். 

மொட்டை அஜித்தாக வரும் காட்சிகள் தான் படத்தில் தெறிகாட்சிகள். படத்தில் காதல் காட்சிகள் இல்லாவிட்டாலும், ஆக்‌ஷன் காட்சிகளையும் காமெடியுடன் நடித்து கலக்கியிருக்கிறாராம் அஜித். 

எல்லாப் படத்திலும் பைக் ஓட்டும் அஜித், இந்தப் படத்தில் ஹர்லி டேவிட்சன் பைக்கை மிரட்டலுடன் ஓட்டி அசத்தியிருக்கிறார். 

ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கு முன்னாலும் உடற்பயிற்சி மேற்கொண்டுவிட்டு உடனே சென்று நடித்திருக்கிறாராம். அதிபயங்கரமான உடற்பயிற்சியை படப்பிடிப்பு தளத்திலேயே செய்து மிரட்டியிருக்கிறார் அஜித். 

தெறிக்கவிடலாமா போன்ற பல சரவெடி பட்டாசு வசனங்கள் நிச்சயம் ரசிகர்களை விசிலில் தெறிக்கவிடும். படத்தைப் பார்த்த சென்சார் கமிட்டியினர் நெகிழ்ந்து உருகியிருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இந்த தீபாவளியைக் குடும்பத்துடன் கொண்டாட வேதாளம் ரைட் சாய்ஸ்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions