முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் - பரபரப்பில் மதுரை

Bookmark and Share

முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் -  பரபரப்பில் மதுரை

அஜித்தின் வேதாளம் படம் ரிலீஸாவதை முன்னிட்டு போஸ்டர், பேனர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், தம்பி ராமையா, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் டிக்கெட் ரூ500க்கு விற்கப்படுவதாக மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், ''முதல்வருக்கு வேண்டுகோள், அஜித்தின் 56-வது படமான வேதாளம் படத்தின் ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. வல்லமை வாய்ந்த தாங்கள், வேதாளம் படத்தின் டிக்கெட் நியாயமான விலையில் கிடைக்க ஆட்சியருக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டுகிறோம்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions