என் இதயத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்: பல வருடங்கள் கழித்து அஜித் பரபரப்பு பேட்டி

Bookmark and Share

என் இதயத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்: பல வருடங்கள் கழித்து அஜித் பரபரப்பு பேட்டி

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘வேதாளம்’ படத்தில் அஜித், ஸ்ருதி, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ளார். அஜித் தனது படங்கள் வெளியாகும் முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளவர்.

எனவே வரும் 10ம் தேதி வேதாளம் வெளியாகவிருப்பதால் நேற்று திருமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித் அதிகாலை வேளையில் தான் அங்கு சென்றிருந்தார். அப்படியிருந்தும் அஜித்தைக் கண்ட ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.

மேலும் பல ரசிகர்கள் அஜித்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டு கேள்விகளை கேட்டுள்ளனர். அப்போது அஜித், “எனது ரசிகர்கள் ஒவ்வொருவரும் என் இதயத்தில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு என் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று மட்டும் கூறிச் சென்று விட்டாராம்.


Post your comment





Related News
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?
சிங்கபூரில் மாஸ் காட்டும் அஜித்!
அஜித்தின் கதாப்பாத்திரம் குறித்து வெளிவந்த சுவாரஷ்ய தகவல்
உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்
அஜீத் ரசிகர்கள் எடுக்கும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions