அஜீத்தின் வேதாளம் மர்மம் வெளியானது?

Bookmark and Share

அஜீத்தின் வேதாளம் மர்மம் வெளியானது?

‘வேதாளம்’ சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், தம்பிராமையா, அஸ்வின் கக்குமனு, அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ‘பாட்ஷா’ படத்தை போன்று கேங்ஸ்டர் மற்றும் ஒரு ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. 

இப்படம் குறித்த சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் அஜித், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். லட்சுமி மேனன் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தம்பிராமையா இவர்களுக்கு அப்பாவாகவும், அப்புக்குட்டி அஜித்துக்கு நண்பராகவும் நடித்துள்ளார்களாம். 

ஆரம்பத்தில் கணேஷாக வரும் அஜித், பிளாஸ்பேக் காட்சிகளில் டானாக வருகிறாராம். கணேஷ் கதாபாத்திரம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கியுள்ளனர். டான்கதாபாத்திரத்தை சென்னையில் படமாக்கியிருக்கிறார்கள். 

இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேவேளையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ என்ற பாடலின் டீசர் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த டீசரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions